பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 24 பேட்டரிகள் திருட்டு


பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 24 பேட்டரிகள் திருட்டு
x

திருக்கோவிலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் 24 பேட்டரிகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புறவழிச்சாலை அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் செல்போன் கோபுரம் உள்ளது. இங்கிருந்த 24 பேட்டரிகள் திடீரென மாயமானது. இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரி வடிவேலன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.

1 More update

Next Story