மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி


மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள முருகமங்கலம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், வருவாய் ஆய்வாளர் ரியாஸ் அகமது, கிராம நிர்வாக அலுவலர் பாலகுருநாதன், மக்கள் நலப்பணி ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story