பொதுமக்கள், நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்
நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நமக்கு நாமே திட்டம்
இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
ஊரகப்பகுதி மக்களின் சுயசார்புத்தன்மை மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவித்து சமுதாய சொத்துக்கள் உருவாக்குவதை தமிழக அரசினால் 2023-2024-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டிடங்கள், வகுப்பறை, ஆய்வகங்கள், கழிவறை, சைக்கிள் நிறுத்துமிடம், அரசு விடுதி கட்டிடங்கள், சத்துணவு மையங்கள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், தளவாட சாமான்கள், புத்தகங்கள், இருக்கை வசதி, கணினி வசதி, சுற்றுச்சுவர் சுற்று வேலி அமைத்தல் ஆகிய திட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
அரசு ஆஸ்பத்திரி
மேலும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைநிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவற்றிற்கான கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், சமுதாயக்கூடம் கட்டுதல், அடிப்படை வசதி பணிகளான குடிநீர் வழங்குதல், சிமெண்டு சாலை, பேவர் பிளாக் சாலை, பாலங்கள், கதிரடிக்கும் களம், திரவக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான மேம்பாட்டு பணிகள், பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள், சாலை திட்டுகள், நீரூற்றுகள் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை தேர்வு செய்து பொதுமக்கள் பங்களிப்பு பணிக்கான மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு தொகையினை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்பு வரைவோலையுடன் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பழங்குடியினர் ஊரக பகுதியில் உள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் குடியிருப்புகளில் உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்படும் பணிக்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான மதிப்பீட்டுத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் எனவும், திட்டங்களுக்கு பெருமளவில் பங்குத்தொகை செலுத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.