திருச்செந்தூரில் பொது அன்னதானம்
திருச்செந்தூரில் பொது அன்னதானம் நடந்தது.
தூத்துக்குடி:
திருச்செந்தூரில் உள்ள 500 வருடங்கள் பழமையான அனைத்து தேவேந்திரகுல வேளாளர் சமூக மடங்களான வீரநாட்டார் அறமடம், சீவந்திய நாட்டார் அறமடம், பருத்திக்கோட்டை நாட்டார் அறமடம், தூத்துக்குடி உறவுமுறை நாட்டார் அறமடம், பட்டணக்கரை சிக்கை நாட்டார் அறமடம், செலுகை நாட்டார் அறமடம், கொற்கை குடைவள நாட்டார் அறமடம் சார்பில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம.தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்சசியில் வைகாசி விசாக விழாவிற்கு வந்த பக்தர்கள் பெருமளவில் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். நிகழ்ச்சியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பெரியவர்கள் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து தேவேந்திரகுல வேளாளர் அற மடங்கள் ஒருங்கிணைப்புக் குழு செய்து இருந்தது.