ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கல்வராயன்மலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகிறார்கள். கல்வராயன்மலைக்கு செல்லும் பாதைகள் மிகவும் வளைவாக இருப்பதால் இங்கு விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிமலை மும்மூனை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமை தாங்கி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறினர். இதில் தனிப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார், மலைவாழ்கள் மக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story