செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ரேஷன் கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுக்கிறது. போலிக்அமிலம் கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி பலமுறை தர ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. மேலும் உலக ககாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறையே செறிவூட்டப்பட்ட அரிசி ஆகும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகையினை மாவட்ட கலெக்டர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
Related Tags :
Next Story