குப்பை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


குப்பை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x

திருக்காலிமேடு பகுதியில் பொதுமக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த செயல்முறை விளக்க விழிப்புணர்வை காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் ஏற்படுத்தினார்.

திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாநகராட்சி நாள்தோறும் பல லட்சம் மதிப்பிலான குப்பைகளை கையாண்டு வருகிறது. இநத நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திருக்காலிமேடு பகுதியில் அந்த பகுதி மாமன்ற உறுப்பினரும் காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயருமான குமரகுருநாதன் அந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

மேலும் குப்பைகளை தரம் பிரிக்காமல் வைத்திருந்த வீடுகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விளக்கங்களையும் குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சியிடம் அளிக்கும் செயல் முறையினை மாநகராட்சி ஊழியர்களுடன் செய்து காட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள், அந்த பகுதி சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story