பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி


பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
x

பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. பசுமை தாயகம் சார்பில் 'காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உறுதியேற்போம்' என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.

மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் துணை செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கட்சி நிர்வாகிகள் என்.எல்.சி. வேண்டாம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதில், புவியின் வெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித இனமும் அழிவின் பிடியில் நிற்கிறது. காலநிலை மாற்றம் தான் இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையின் சவாலாக உள்ளது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் புருஷோத்தம்மன், துணைத்தலைவர் தாமு, இளைஞர் அணி செயலாளர் ஜெகன், சிறுபான்மை பிரிவு செயலாளர் காதர்பாஷா, பசுமை தாயகம் காவியச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story