மூங்கில்துறைப்பட்டுமின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைகுறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு


மூங்கில்துறைப்பட்டுமின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைகுறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு வருவதாக கூறி, மூங்கில்துறைப்பட்டு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சீராக இருப்பதில்லை. அவ்வப்போது குறைந்த மின் அழுத்தத்துடன் வருகிறது.

இதனால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வந்தது. மேலும் கடைகளிடல் பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட எந்த ஒரு பொருட்களையும் வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகளின் வியாபாரமும் பாதிப்புக்கு உள்ளானது. இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மூங்கில்துறைப்பட்டில் உள்ள இளம் மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நுழைவு வாயில் முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 2 வாரத்திற்குள் குறைந்த மின்னோட்டத்தை சீரமைத்து கூடுதலாக மின் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story