குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

திருப்பத்தூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் மறியல்

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு திருமால் நகர், குடியரசு நகர் குள்ளாட்சி வட்டம் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகள் ஊராட்சி பகுதிகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில், மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல், நகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாத காலமாக லாரியில் குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஊராட்சி பகுதியில் இருந்து நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் இந்த பகுதியில் இதுவரை மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் வழங்கப்படவில்லை. ஆகையால் தண்ணீர் கிடைப்பது மிகவும் சிரமாக உள்ளது. லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் ஒரு மாத காலமாக வரவில்லை. உடனடியாக எங்கள் பகுதிக்கு மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்பட வேண்டும் என்றனர்.

கேன் தண்ணீர்

இதுபற்றி தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் வெற்றி கொண்டான் உடனடியாக அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தனியார் கம்பெனியிலிருந்து 500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன் வரவைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.


Next Story