ஆட்டையாம்பட்டி அருகேஆடு திருட வந்தவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடிமரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு


ஆட்டையாம்பட்டி அருகேஆடு திருட வந்தவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடிமரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு
x
சேலம்

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே ஆடு திருட வந்தவர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவர்களை மரத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கத்தியை காட்டி மிரட்டல்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே பெரியசீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி. இவருடைய மனைவி சரிதா (வயது 40). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு 2 பேர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தனர். அப்போது சரிதா வீட்டின் நாய் குரைத்துள்ளது.

இதைக்கண்டு சரிதா அந்த நபர்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் கத்தியை காட்டி சரிதாவை மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன அவர் கூச்சலிட்டார்.

தர்மஅடி

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்டு அந்த நபர்கள் தப்பி செல்ல முயன்றனர். அதற்குள் பொதுமக்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்த அந்த நபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

விசாரணையில், அவர்கள் வலசையூரை சேர்ந்த ஹரிஸ் (23), அம்மாபேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆடுகளை திருடுவதற்காக அந்த பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ெபாதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story