மின்கட்டணம் கணக்கீடு குறித்து பொதுமக்கள் புகார்


மின்கட்டணம் கணக்கீடு குறித்து பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மின்கட்டணம் கணக்கீடு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களுக்கு மின்கட்டணம் அளவுக்கு அதிகமாக கணக்கிடப்படுவதாக கூறி மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாரதிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கிறோம். எங்களில் பலருக்கு ரூ.200-க்கு மேல் மின்கட்டணம் வந்தது கிடையாது.

ஆனால் கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் பலமடங்கு கணக்கிடப்படுகிறது. நெசவுத்தொழில் நலிவடைந்து விட்டதால் மிகவும் சிரமப்படும் நிலையில் மின்கட்டணத்தை அதிகமாக கணக்கிடுவதால் சிரமப்படுகிறோம். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் முறையீடு செய்வோருக்கு மின்கட்டணம் குறைக்கப்படுகிறது. எனவே முறையாக மின்கட்டணம் கணக்கீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Related Tags :
Next Story