தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கடைகளில் குவிந்த பொதுமக்கள்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
x
நாமக்கல்

நாமக்கல்:

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜவுளி, பட்டாசு, நகை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விடுமுறை நாளான நேற்று கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் கடைவீதி, பிரதான சாலை, சேலம் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஜவுளி மற்றும் நகைகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். மாலையில் லேசான சாரல் மழை பெய்ததால், சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story