காட்பாடி காந்திநகருக்குள் டவுன் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


காட்பாடி காந்திநகருக்குள் டவுன் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காந்திநகருக்குள் ஒரு சில டவுன் பஸ்களே வந்து செல்வதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே அனைத்து அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடி காந்திநகருக்குள் ஒரு சில டவுன் பஸ்களே வந்து செல்வதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே அனைத்து அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு அலுவலகங்கள்

காட்பாடி காந்திநகரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொதுப்பணித்துறை மாவட்ட அலுவலகம், சுற்றுச்சூழல் துறை மாவட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அலுவலகம், காந்திநகர் தபால் நிலையம், காந்திநகர் தொடக்கப்பள்ளி, தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அக்சீலியம் பள்ளி, கல்லூரி என பல அரசு அலுவலகங்களும், பள்ளி, கல்லூரிகளும் உள்ளது.

இந்த அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் டவுன் பஸ்கள் வசதியாக வந்து சென்றதால் அதனை பயன்படுத்தி வந்தனர்.தற்போது காந்திநகருக்குள் ஒரு சில டவுன் பஸ்கள் தான் வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் பஸ்கள் வருவதில்லை. சில்க்மில் பஸ் நிறுத்துவதற்கு அடுத்தது கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம், தொன்போஸ்கோ பள்ளி பஸ் நிறுத்தம், ஈ.பி. பஸ் நிறுத்தம், ரவுண்டானா பஸ் நிறுத்தம் ஆகிய பஸ் நிறுத்தங்களில் இறங்கி, ஏறி செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

பஸ்கள் வருவது குறைந்து விட்டது

வேலூர் பேலஸ்கபே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றும் போதே நேராக காட்பாடி, நேராக காட்பாடி என பயணிகளை ஏற்றி கொண்டு சென்று செல்கின்றனர். காந்திநகருக்குள் டவுன் பஸ்கள் வந்து செல்வது குறைந்துவிட்டது.

காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும், மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள்ளும் என ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் சில அரசு டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என வந்து செல்கின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

நடந்துதான் செல்கிறோம்

இது குறித்து காந்திநகர் வியாபாரி பழனி கூறியதாவது;

காந்திநகர், ராதாகிருஷ்ணன் நகர், வாரியார்நகர், காங்கேயநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் ரவுண்டானா பஸ் நிறுத்தத்தில் இறங்கி செல்வார்கள். ஆனால் தற்போது பஸ்கள் வராததால் சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக ராதாகிருஷ்ணன் நகருக்கு ஆட்டோக்களே வருவதில்லை. கேட்டால் சாலைகள் சரியில்லை என கூறுகின்றனர். வற்புறுத்தி கூப்பிட்டால் ரூ.100 கட்டணமாக கேட்கின்றனர்.

பெண்கள், குழந்தைகள் இருந்தால் ஆட்டோவில் சென்று விடுகிறோம். தனியாக என்றால் நடந்து தான் செல்கின்றோம். அதேபோல பாரதிநகர், வி.ஜி.ராவ்நகர் செல்லும் மக்கள் ஓடை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து செல்கின்றனர்.எனவே காந்திநகருக்குள் அனைத்து டவலுன் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

கல்லூரி மாணவி உமா மகேஸ்வரி கூறியதாவது;

காந்திநகர் ரவுண்டானா கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி கல்லூரிக்கு செல்வேன். தற்போது பஸ்கள் காந்திநகருக்குள் வராததால் சில்க்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி நடந்து வருகிறேன். என்னைப்போல கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காந்திநகருக்குள் பஸ்கள் வந்து, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காந்திநகருக்குள் பஸ்கள் குறைந்த அளவு இயங்குவதால் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே முன்பு வந்தது போல அனைத்து டவுன் பஸ்களும் காந்திநகர் வழியாக காட்பாடிக்கும், பாகாயத்திற்கும் செல்ல வேலூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.


Related Tags :
Next Story