கனரக வாகனம் இயக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கனரக வாகனம் இயக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

கனரக வாகனம் இயக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு 4 வழிச்சாலை செல்கிறது. அதைத்தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வெள்ளமடம் சந்திப்பிலிருந்து 4 வழிச்சாலைக்கு வேகமாக செல்வதும் வருவதுமாக உள்ளன. இதனால் சின்ன வாகனங்கள் செல்ல முடியாமல், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் வருவதற்கு பீமநகரி ஊராட்சி தலைவர் சஜிதா சுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனாலும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தினர். அதையும் வாகன ஓட்டிகள் உடைத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளமடம் சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பீமநகரி பஞ்சாயத்து தலைவர் சஜிதா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆறுமுகநாதன், சி.எம்.சி. நகர் குடியிருப்பு நலசங்க தலைவர் தாயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது, 'போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வார்டு உறுப்பினர் சத்திய பாலா, ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் எஸ்.எல்.சுப்பிரமணியன், சி.எம்.சி. நகர் குடியுருப்பு நலசங்க செயலாளர் வி.எஸ்.முருகன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

------


Next Story