கோவை கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா


கோவை கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 Aug 2023 12:45 AM IST (Updated: 1 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் கேட்டு கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

அடிப்படை வசதிகள் கேட்டு கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர்.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தர்ணா போராட்டம்

மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்ட தால் அவர்கள், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் நாங்கள் குடியிருந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 1,440 குடும்பங்கள் உள்ளன. குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. போக்குவரத்து வசதி இல்லாதால் குழந்தைகள் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. அடிப்படை வசதி கேட்டு அதிகாரிக ளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

கூலி உயர்வு

கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், தமிழகத்தில் 79 தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை தைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் 5 சதவீத கூலி உயர்வு வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 8 ஆண்டாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே எங்களுக்கு கூலி உயர்வை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.


Next Story