கந்தனேரி மணல் குவாரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்


கந்தனேரி மணல் குவாரியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

கந்தனேரி மணல் குவாரியில் டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

கந்தனேரி மணல் குவாரியில் டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டிராக்டாகளை சிறைபிடித்து போராட்டம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்துள்ள கந்தனேரியில் அரசு மணல் குவாரி 45 நாட்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. அப்போது குடியாத்தத்திற்கு செல்லும் ராட்சத கூட்டுக்குடிநீர் பைப் லைன் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜதர்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் குவாரிக்குள் சென்று அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த டிராக்டர்களை சிறைபிடித்து மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடைந்த குடிநீர் பைப்புகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும், இனி வரும் நாட்களில் மணல் அள்ளும்போது கவனமாக செயல்பட வேண்டும் என மணல் குவாரி உரிமையாளர்களிடம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story