பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்


பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 12 Aug 2023 7:15 PM GMT (Updated: 12 Aug 2023 7:16 PM GMT)

பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

திருக்கடையூர் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தரங்கம்பாடி துணை தாசில்தார் விஜயராணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் முன்னிலை வைத்தார். முகாமில் புத்திரன் திடல், படுகை, ஏரிஓடை, மேலத்தெரு, நடுத்தெரு, பாரதிநகர், சித்தாங்கூர், கோழிபத்து, வளசரவாசல், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story