பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கின்றது.
பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி 10-ந் தேதி (சனிக்கிழமை) குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிதாக ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டில் செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் போன்றவற்றுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு உரிய ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து செல்ல வேண்டும். செல்போன் எண் பதிவு, மாற்றத்துக்கு உரிய செல்போனையும் உடன் வைத்திருக்க வேண்டும்.
மேலும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 9342471314 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.