பொதுவினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்
திருக்கோவிலூரில் பொதுவினியோக திட்ட குறைதீர்ப்பு முகாம் இன்று நடக்கிறது
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டை குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் இணைத்தல், குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாமில் திருநங்கைகளும் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருக்கோவிலூர் வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story