பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்சின்னசேலத்தில் இன்று நடக்கிறது


பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்சின்னசேலத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:29+05:30)

பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம் சின்னசேலத்தில் இன்று நடக்கிறது.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் படி, சின்னசேலம் தாலுகாவில் பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடனே தீர்வு காணப்படும்.

எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக, சின்னசேலம் குடிமைப் பொருள் தனி தாசில்தார் கமலம் தெரிவித்துள்ளார்.


Next Story