கள்ளக்குறிச்சியில்பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்


கள்ளக்குறிச்சியில்பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:15:56+05:30)

கள்ளக்குறிச்சியில் பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமை பொருள் தனிதாசில்தார் அலுவலகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் விதமாக சிறப்பு குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முகாமில் 55 பேர் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம், கடை மாற்றம் போன்றவை குறித்து மனு கொடுத்தனர். இதில் 53 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் முதுநிலை உதவியாளர் அண்ணாமலை, இளநிலை உதவியாளர் ஜோதிபாசு, வட்ட பொறியாளர் சின்னதுரை மற்றும் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story