பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்


பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
x

பாபநாசத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொது வினியோக திட்டத்தின்கீழ் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையில் நடந்தது. முகாமில் குடும்ப அட்டை நகல், பெயர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 15 மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் 2 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டது. முகாமில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபு, இளநிலை வருவாய் ஆய்வாளர் சவுந்தர்யா, இளநிலை உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Next Story