பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம்
சங்கராபுரத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் குடும்ப அடடையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் தொடர்பாக 28 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் வட்ட பொறியாளர் அய்யனார், நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story