பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம்


பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம்
x

சங்கராபுரத்தில் பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுக்கா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தார். உதவியாளர் செங்குட்டுவன் வரவேற்றார். இந்த முகாமில் நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், செல்போன் எண் மாற்றம், அங்கீகாரச் சான்று, குடும்ப தலைவர் பெயர் மாற்றம் தொடர்பாக 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் உதவியாளர் ஜோதிபாசு, கம்ப்யூட்டர் என்ஜினீயர் அய்யனார், நுகர்வோர் சங்க வட்ட தலைவர் மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story