சிவகங்கை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


சிவகங்கை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சிவகங்கை


சிவகங்கை மாவட்டத்தி்ல் உள்ள தாலுகா வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக நாளை(சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகலட்டை கோருவது, கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

பயன்பெறலாம்

எனவே நாளைபொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெறும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாமில் கோவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story