தூத்துக்குடி மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


தூத்துக்குடி மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வருகிற 10-ந் தேதி(சனிக்கிழமை)பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

சிறப்பு முகாம்

பொதுவினியோக திட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் மாதம் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

இந்த முகாமில் மின்னணு ரேஷன்கார்டு முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரி செய்து வழங்கப்பட உள்ளது.

பயன் பெறலாம்

மேலும் மின்னணு குடும்பஅட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். முகாமில் பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story