ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது.
ராணிப்பேட்டை
பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல், குடும்ப தலைவரின் புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும்.
இதுதவிர ரேஷன் கடைகளின் சேவைகளில் குறைபாடு இருப்பின் மக்கள் குறைகளை தெரிவித்தால் விரைந்து தீர்வுகாண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story