பெரம்பலூரில் நாளை பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள்


பெரம்பலூரில் நாளை பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள்
x

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:-

பெரம்பலூர் தாலுகாவில் மேலப்புலியூர் (மேற்கு) கிராமத்தில் ஆர்.டி.ஓ. தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தழுதாழை கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகாவில் திருமாந்துறை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவில் நாட்டார்மங்கலம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் முகாம்கள் நடக்கிறது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளை தெரிவித்து, பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story