பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
x

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. அரியலூர் தாலுகாவிற்கு கீழக்கொளத்தூர் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் தண்டலையிலும், செந்துறை தாலுகாவில் பெரியாக்குறிச்சியிலும், ஆண்டிமடம் தாலுகாவில் கூவத்தூரிலும் (வடக்கு) பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. கூட்டத்தை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்தினார்கள். இதில் கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல்Public Distribution Scheme Special Grievance Camp, பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 189 மனுக்களில், 176 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மனுக்கள் சரி பார்ப்புக்காக நிலுவையில் உள்ளது.


Next Story