மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 496 பேர் எழுதினர்


மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 15 ஆயிரத்து 496 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்ைவ 15 ஆயிரத்து 496 பேர் எழுதினர்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்ைவ 15 ஆயிரத்து 496 பேர் எழுதினர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் நேற்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வுகளை எழுத 7 ஆயிரத்து 500 மாணவர்களும் 8 ஆயிரத்து 723 மாணவிகளும் சேர்த்து 16 ஆயிரத்து 223 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் நேற்று 7 ஆயிரத்து 48 மாணவர்களும் 8 ஆயிரத்து 448 மாணவிகளும் சேர்த்து 15 ஆயிரத்து 496 பேர் தேர்வு எழுதினார்கள்.

749 பேர் எழுதவில்லை

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 465 மாணவர்களும், 284 மாணவிகளும் சேர்த்து 749 பேர் தேர்வு எழுத வரவில்லை. இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.


Next Story