தேன் கூடுகளால் பொதுமக்கள் அச்சம்
தேன் கூடுகளால் பொதுமக்கள் அச்சம்
கிணத்துக்கடவு
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கிணத்துக்கடவில் 2¼ கிலோ மூட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல இடங்களில் மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. பகல் நேரத்தில் காகங்கள் பறந்து வந்து, கூட்டை கலைத்துவிட்டு செல்கின்றன. இதனால் கூட்டில் இருந்து பறந்து திரியும் தேனீக்கள், அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கொட்டி வருகின்றன. இதனால் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. அவர்கள் தேன் கூடுகளை கண்டு அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து, அந்த தேன் கூடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.