அண்ணா நினைவுநாளையொட்டி கோதண்ட ராமர் கோவிலில் பொதுவிருந்து
அண்ணா நினைவுநாளையொட்டி கோதண்ட ராமர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது.
திருவண்ணாமலை
ஆரணி
அண்ணா நினைவுநாளையொட்டி கோதண்ட ராமர் கோவிலில் பொதுவிருந்து நடைபெற்றது.
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் தச்சூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் ஏழை எளிய பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில் ஆய்வாளர் முத்துச்சாமி, செயல் அலுவலர் ம.சிவாஜி ஆகியோர் தலைமையில் கோவிலில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டு பொது விருந்து நடந்தது.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பழனி, அறங்காவலர்கள் பரமேஸ்வரன், நவநீதம் சேகர் ஆகியோர் முன்னிலையில் 500 நபர்களுக்கு வடை, பாயாசத்துடன் உணவு பரிமாறப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story