நாமக்கல்லில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


நாமக்கல்லில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
நாமக்கல்

நாமக்கல் உட்கோட்ட போலீஸ் நிலையங்கள் சார்பில் நேற்று நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.

இதேபோல் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களும் புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இந்த முகாமில் குடும்ப தகராறு, பணம் கொடுக்கல், வாங்கல், நிலத்தகராறு மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து மொத்தம் 102-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. இதில் நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை கொடுத்தனர்.


Next Story