பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
நாகையில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகையில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முகாமில் 31 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார். மேலும் போலீஸ் துறை சம்பந்தமான குறைகள், கள்ளசாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தயக்கம் இன்றி நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்றார். இதில்துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், கீதா (பயிற்சி), இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் (வெளிப்பாளையம்), சரவணன் (டவுன்), சிவராமன், ஆனந்தராஜ் (வேளாங்கண்ணி), பசுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story