பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெறப்பட்ட 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். மேலும் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும், நேரில் வர முடியாதவர்கள் 10581 என்ற இலவச எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும், இதுதொடர்பான ரகசியம் காக்கப்படும் என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
Related Tags :
Next Story