பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 31 மனுக்களை வழங்கினர். சீட்டு மற்றும் பணமோசடி, சொத்து தகராறு, நிலமோசடி குறித்த புகார் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டு (இணையவழி) குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் பலர் பங்கேற்றனர்.


Next Story