பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, பாதாங்கி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோசடியாக விற்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நாங்கள் தாக்கியதாக கொடுத்த பொய் புகாரில் கை.களத்தூர் போலீசார் எங்கள் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 211 கோரிக்கை மனுக்களை பெற்றார்.


Next Story