காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம்

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரத்தை அடுத்த அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்கள் காஞ்சீபுரம் மாநகராட்சி 27-வது வார்டு உறுப்பினர் ஷாலினி வேலு மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் தினக்கூலியாக வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்கள் பகுதியில் அரசு மூலம் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மின்சார இணைப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி என அனைத்து வசதிகளும் பெற்று வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பொதுபணித்துறையில் இருந்து எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். நாங்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். எனவே எங்கள் வீடுகளை இடிக்காமல் பாதுகாத்திடுங்கள். இல்லை எனில் அதே பகுதியில் மாற்று இடம் வழங்குங்கள்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகன் குப்பம், பிள்ளையார்குப்பம், மேட்டூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் செயல்படும் பன்றி வளர்ப்பு கூடாரத்தை அகற்ற வேண்டி மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரயாவிடம் மனு அளித்தனர்.

1 More update

Next Story