பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். இதில், இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், கோரி 28 மனுக்களும், வேலை வாய்ப்பு கேட்டு 15 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித் தொகை கோரி 25 மனுக்களும், புகார் தொடர்பான 20 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 10 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 15 மனுக்களும் என மொத்தம் 113 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. கூட்டத்தில், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story