கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுவது, புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிப்பது, சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்வது, பிறப்பு, இறப்பு சான்று பெறுவது, புதிய குடிநீர் இணைப்பு பெறுவது, குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்பந்தமான புகார்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் கரூர் மாநகராட்சி சார்பில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாநகராட்சி துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் குப்பைகள் அகற்றுதல், சாக்கடை தூர்வாருதல், குடிநீர் வினியோகம், தெரு விளக்கு, ரோடு சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 325 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர். இதில் கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story