பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா, ஆதர்ஷ் பசேரா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் கொடுத்தனர். இதில் பலர் பயனடைந்தனர்.
Related Tags :
Next Story