பொதுசுகாதாரம்-நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


பொதுசுகாதாரம்-நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் பஸ் நிலையத்தில் பொதுசுகாதாரம்-நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாதவன் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூரில் இருந்து வருகை தந்த கிராமிய கலைக்குழுவினர் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், பாலித்தீன் பை ஒழிப்பு, திறந்தவெளியில் மலம் கழித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், வீடுகளில் பொதுமக்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு பிரித்து வழங்குவது மற்றும் பிரித்து வழங்குவதின் அவசியம், பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை எவ்வாறு நடத்த வேண்டும், மஞ்சள் பை அவசியம் உள்ளிட்டவை குறித்து கரகாட்டம், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மூலம் குத்தாலம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், துணை தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித், இளநிலை உதவியாளர் சுந்தர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story