தென்பெண்ணையாற்றை கடக்க பொதுமக்களுக்கு தடை


தென்பெண்ணையாற்றை கடக்க பொதுமக்களுக்கு தடை
x

வெள்ளப்பெருக்கு காரணமாக தென்பெண்ணையாற்றை கடக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்

சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு அதிகமான தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவும், ஆற்றின் கரையோரம் உள்ள கிராமமக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story