மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரண்மனை பகுதியில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன், பொது செயலாளர்கள் ஆத்மா கார்த்திக, பவர் நாகேந்திரன், மணிமாறன், கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்பாலகணபதி மற்றும் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி செயலாளர் பிரவீன் குமார், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் முருகன், இளைஞர் அணி மாநில செயலாளர் ராம்குமார், நகர் தலைவர் கார்த்திகேயன், மகளிரணி மாநில துணை தலைவி கலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி மேற்கொண்டனர்.