தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், நகர செயலாளர் மலையரசன், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, ஒன்றிய அவைத்தலைவர் நூர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் விஜயகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் கலந்து கொண்டு தமிழகஅரசின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினா். இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் பாலு, அமுதா தட்சிணாமூர்த்தி, சண்முகம், மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், அப்துல் கபூர், இளைஞர் அணி நிர்வாகிகள் அப்போலோலியன், ஏழுமலை மற்றும் தியாகதுருகம் வடக்கு ஒன்றிய அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கொளஞ்சி நன்றி கூறினார்.


Next Story