தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, நகரசபை தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் வரவேற்றார். முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், சத்தியசீலன், மாவட்ட துணைச்செயலாளர் ஞானவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வமணி நன்றி கூறினார்
Related Tags :
Next Story