கும்பகோணத்தில் மீன்கள் வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்


கும்பகோணத்தில் மீன்கள் வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்
x

ஐப்பசி மாதம் பிறந்தும் சுபமுகூர்த்தம் மற்றும் சதுர்த்தி விரதம் என்பதால் கும்பகோணத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 கிலோ வஞ்சிரம் மீன் ரூ.600-க்கு விற்பனையானது.

தஞ்சாவூர்

ஐப்பசி மாதம் பிறந்தும் சுபமுகூர்த்தம் மற்றும் சதுர்த்தி விரதம் என்பதால் கும்பகோணத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. 1 கிலோ வஞ்சிரம் மீன் ரூ.600-க்கு விற்பனையானது.

மீன்மார்க்கெட்

கும்பகோணம் நால்ரோடு பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட்டில் 25-க்கும் மேற்பட்ட மீன்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நாகை, அதிராம்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதற்காக விசைப்படகுகள், பைபர்படகுகள் எனப்படும் சிறியவகை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பல நாட்கள் அங்கேயே தங்கி மீன்களை பிடித்து வருகின்றனர்.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்படுகிறது.

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக வருகின்றன. மார்க்கெட்டிற்கு வழக்கத்தை போல் மீன்கள் வந்தது. ஆனாலும் விலை குறைந்த அளவிலேயே காணப்பட்டது. செங்காலா மீன் ரூ.200-க்கும், காலா ரூ.400-க்கும், கெண்டை மீன் ரூ.150-க்கும், திருக்கை ரூ.400-க்கும், சீலா ரூ.250-க்கு விற்பனையானது.

விலை குறைவு

விறால் மீன் ரூ.350 முதல் ரூ.400-க்கும், நண்டு ரூ.200-க்கும், இறால் ரூ.300-க்கும், மத்தி மீன் ரூ.105-க்கும், வஞ்சிரம் மீன் ரூ.600-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்திற்கு வழக்கமாக 3 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மீன்கள் வரத்து எப்போதும் போல தான் உள்ளது. நேற்றுமுன்தினம் வரை புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் யாரும் சாப்பிடாமல் விரதம் இருந்தனர்.

பொதுமக்கள் மீன்வாங்க வரவில்லை

இதனால் மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனை குறைந்த அளவில் நடந்தது. புரட்டாசி மாதம் எப்போது தான் முடியும் என்று எதிர்பார்த்து ஐப்பசி மாதம் ஆரம்பித்தவுடன் பெரும்பாலானோர் இறைச்சி கடைகளை நாடி செல்வார்கள். ஆனால் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிவிட்டது. இருந்தாலும் ஐப்பசி முதல் நாள் சுப முகூர்த்த தினம் மற்றும் சதுர்த்தி விரத நாள் என்பதால் பொதுமக்கள் யாரும் மீன்வாங்க முன் வரவில்லை என்றனர்.


Next Story