நித்திரவிளை அருகே குடியிருப்பு பகுதியில்இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு


நித்திரவிளை அருகே குடியிருப்பு பகுதியில்இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே குடியிருப்பு பகுதியில்இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே ஊற்றுகுழி பகுதியில் குடியிருப்பு பகுதி நிறைந்த இடத்தின் அருகே கிடந்த காலிமனையில் நேற்று மதியம் வேறு பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்த தனது தாயாரின் உடலுடன் அடக்கம் செய்ய உறவினர்களுடன் வந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அந்த பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஏழுதேசம் பி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் கல்லறை தோட்டம் அமைக்க வேண்டி டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது இதனையடுத்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கல்லறை தோட்டம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போது இறந்தவரின் உடலை மட்டும் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இனிமேல் இங்கு வேறு யாரையும் அடக்கம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story