செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
முக்கூடலில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருநெல்வேலி
முக்கூடல்:
முக்கூடல் சின்னையா தெருவில் தனியார் இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முக்கூடல் கிராம நிர்வாக அலுவலகத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் திரண்டு சென்று மனு வழங்கினர்.
அப்போது உரிய அனுமதியின்றி செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story